வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை அமைச்சின் 1.5 கோடி ரூபா ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்திலுள்ள இரு மருத்துவமனைகள் மறுசீரமைப்புச் செய்யப்படவுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மருத்துவமனை 7.7 மில்லியன் ரூபா செலவிலும், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் ஆதார மருத்துவமனை 7.3 மில்லியன் ரூபா செலவிலும் மறுசீரமைக்கப்படவுள்ளன.
நான்கு மாத காலத் தில் மறுசீரமைத்து இவை மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்படவுள்ளன.