Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு

November 17, 2018
in News, Politics, World
0

கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது தாலி, சங்கிலி மற்றும் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், திருட வந்தவர்கள் தம்மை அடையாளம் தெரியாதவாறு முகத்தினை மறைந்திருந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கியையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, குறித்த பகுதியில் போலித் துப்பாக்கி ஒன்றும் கைவிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தில் தம்மை குறித்த நபர்கள் தாக்கியதாக தெரிவித்து மூவர் கிளிநாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன: ஆனந்தசங்கரி

Next Post

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள்

Next Post

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures