நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
கிளிநாச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர், பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடங்களிற்கு புதிய வர்ண பூச்சுக்களை மேற்கொண்டனர்.
இதன்போது நாடாளுமன்று உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டோர் பாடசாலை கட்டடத்திற்கான வர்ணம் பூசுவதில் ஈடுபட்டனர்.
இதேவேளை அங்கு வருகை தந்த நாமல் ராஜபக்ச ஆகியோரை சிறார்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். வெள்ளம், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறார்களுடன் விளையாட்டு, சினேகபூர்வ செயற்பாடுகள் ஊடாக உள ரீதியான செயற் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.