கிளிநொச்சியில் காணாமல் போனவர்களது விபரங்களை பதிவு செய்யும் அலுவலகமான ஓ.எம்.பி. அலுவலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்று சனிக்கிழமை (08) காலை ஆரம்பமானபோது, அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், அவர்கள் குறித்த அலுவலகத்தினால் பதிவுகளுக்காக வழங்கப்பட்டிருந்த அழைப்புக் கடிதங்களையும் அலுவலகத்தின் முன்னால் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இதனால் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
