கிறீஸில் இரு ரயில்கள் மோதி 36 பேர் உயிரிந்த சம்பவம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏதென்ஸ் நகரிலிருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில், லரிசா நகரில் வைத்து, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலுடன் மோதியது.
இதனால் 36 பேர் உயிரிழந்ததுடன் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், லரிசா நகர ரயில் அதிபரான 59 வயதான ஒருவர் கைது சயெ;யப்பட்டுளளார் என உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும் என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.