சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமூகவலைத்தளங்களில் வந்த தகவலுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள வீரர் குமார் சங்ககாரா களமிறக்கப்படலாம் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது.
ஆனால் இது குறித்து குமார் சங்ககாரா எந்த ஒரு பதிலும் கூறாமல் இருந்தார்.
இந்நிலையில் சங்ககாராவின் ரசிகர் ஒருவர், கிரிக்கெட் ரசிகர்களிடம் உங்களுக்கு என்று தனி மரியாதை உண்டு, கிரிக்கெட் வீரராக நீங்கள் ஒரு நல்ல பெயரைப் பெற்றிருக்கிறீர்கள்.
மேலும் என்மீது வைத்துள்ள மதிப்புக்கு நன்றி எனவும் அவரது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.