கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரத்கிந்த பகுதியில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரத்துபஸ்கெட்டிய மற்றும் பிபில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 38 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.