Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிரா­மிய அபி­வி­ருத்­திக்­கான – நிதி மேலும் குறைகின்றது!!

August 6, 2018
in News, Politics, World
0

கிராம அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின் கீழ் ஒவ்­வொரு பிர­தேச செய­லர் பிரி­வுக்­கும் 200 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்டு அந்த நிதி பாதி­யாக வெட்­டிக் குறைக்­கப்­பட்­டி­ருந்­தது. வெட்­டிக் குறைக்­கப்­பட்ட நிதி மேலும் வெட்­டப்­பட்டு 40 மில்­லி­யன் ரூபாவே வழங்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே ஒதுக்­கப்­பட்ட நிதியே போதாது என்று தெரி­விக்­கப்­பட்டு வந்த நிலை­யில், அது மேலும் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்டு அர­சி­னால் குரு­நா­கல் மாவட்­டத்­தில் கடந்த மாதம் 15ஆம் திகதி கிராம அபி­வி­ருத்­தித் திட்­டம் (கம்­பெரெ­லிய) ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இலங்­கை­யி­லுள்ள 330 பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­கும் தலா 200 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­ப­டும். 12 வகை­யான வேலை­கள் அந்த நிதி­யில் பிர­தேச செய­ல­கங்­கள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டும்.இவ்­வாறு திட்ட அறி­மு­கத்­தின்­போது நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீ­ர­வி­னால் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­தத் திட்­டத்தை கடந்த மாதம் வடக்­குக்கு வந்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோர் ஆரம்­பித்து வைத்­தி­ருந்­த­னர்.

200 மில்­லி­யன் ரூபா­வுக்­கு­ரிய திட்­டங்­களை பிர­தேச செய­ல­கங்­கள் தயா­ரித்­தி­ருந்­தன. கடந்த மாதம் 25ஆம் திகதி தலைமை அமைச்­ச­ரின் செய­ல­ரி­னால் அவ­சர அவ­ச­ர­மாக பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

திட்­டத்­துக்­கான ஒதுக்­கீடு 100 மில்­லி­யன் ரூபா மாத்­தி­ரமே என்று குறிப்­பி­டப்­பட்­டி ­ருந்­தது. குறைக்­கப்­பட்ட நிதிக்கு அமை­வாக திட்­டங்­களை மாற்­றும் நட­வ­டிக்­கை­களை பிர­தேச செய­ல­கங்­கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தன.

இந்த நிலை­யில் அந்த நிதி 40 மில்­லி­யன் ரூபா­வா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக இரண்டு தினங்­க­ளுக்கு முன்­னர் மீண்­டும் கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தேச செய­ல­கங்­கள் திட்­டங்­களை மீண்­டும் மீளாய்வு செய்­ய­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

330 பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­கும் ஒரே தட­வை­யில் 100 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கும்­போது 33 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா தேவைப்­ப­டும். திறை­சே­ரி­யால் அந்­த­ளவு நிதியை ஒரே தட­வை­யில் ஒதுக்க முடி­யாது என்­ப­தா­லேயே, பிர­தேச செய­ல­கங்­கள் ஒவ்­வொன்­றுக்­கும் 40 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Previous Post

தந்தையின் இழப்புத் துயரைத் தாங்கியும் – பரீட்சை எழுதிய மாணவி!!

Next Post

சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­ பொலிஸார்

Next Post

சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­ பொலிஸார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures