கியுபெக் நகர பள்ளிவாசல் துப்பாக்கிசூடு. கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டது.
அலெக்ஸ்சான்ரே பிசொநெட்டே மற்றும் மொகமட் கடிர் ஆகிய இரு துப்பாக்கி ஏந்திய இரு நபர்கள் கியுபெக் நகரில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆறு பேர்கள் கொல்லப்பட்டதுடன் 19பேர்கள் வரை காயமடைந்துள்ளனர்.
Bissonnette மற்றும் Khadir ஆகிய இருவரும் துப்பாக்கிதாரிகள் என அனாமதேய பொலிஸ் வட்டாரங்கள் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
இக் கொடூரமான சம்பவம் கியுபெக் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் உள்ளே இரவு 8மணிக்கு முன்னதாக இரண்டு முகமூடி அணிந்த துப்பாக்கி தாரிகள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் என்றும் 39 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.இரண்டாவது சந்தேக நபர் காரிற்குள் இருந்து 911ஐ அழைத்து தான் கையில் ஆயுதத்துடன் இருப்பதாகவும் ஆனால் பொலிசாருடன் ஒத்துழைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என கூறப்படுகின்றது. சூட்டு சம்பவத்திற்கான குறிக்கோள் என்ன என்பதை பொலிசார் வெளியிடவில்லை. ஆனால் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவும் கியுபெக் அதிகாரிகளும் அதிகாரிகளும் இந்நடவடிக்கை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என அழைக்கின்றனர்.
இருவரின் பூர்வீகம் குறித்த தகவல்களை ஆர்சிஎம்பியினர் தெரியப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இருவரும் இதற்கு முன்னர் பொலிசாருக்கு தெரிந்தவர்களல்ல.
இந்த நடவடிக்கை பயங்கரவாத தாக்குதலாக கருதப்பட வேண்டும் என கியுபெக் முதல்வர் Philippe Couillard தெரிவித்தார்.
Alexandre Bissonnette
கடந்த வருடம் இதே பள்ளிவாசலில் பன்றி தலை வைக்கப்பட்டது.