அளுத்கமையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்திருந்தால், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அளுத்கமையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கடந்த அரசாங்கத்துக்கும் நாம் கூறினோம், இந்த அரசாங்கத்திடமும் கூறுகின்றோம். ஆனால், யாரும் அதனை நடைமுறைப்படுத்த இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (25) நள்ளிரவு தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
அளுத்கமையைத் தொடர்ந்து, கிந்தொட்டைப் பிரச்சினை, தெல்தெனிய பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இதற்குக் காரணம் யார்? முதலில் கல் எறிபவர்கள் யார்?. இதன்பின்னால் ஒரு சதிவலை செயப்படுகின்றது. இதற்காகவே விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கத்திடம் நாம் பொறுப்புடன் கூறிவருகின்றோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

