Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிட்டுப்பூங்கா அருகில் – குழப்பம் விளைவித்த இளைஞர் குழு!!

June 4, 2018
in News, Politics, World
0

செம்­மணி வீதி­யில், கிட்­டுப் பூங்­கா­வுக்கு அரு­கில், வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் அலு­வ­ல­கம் முன்­பாக நேற்று மாலை 6.20 மணி­ய­ள­வில் இளை­ஞர் குழு குழப்­பத்­தில் ஈடு­பட்­ட­தால், அந்­தப் பகு­தி­யில் பெரும் பதற்­றம் நில­வி­யது.

இது தொடர்­பில் அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் தெரி­வித்­த­தா­வது,
செம்­மணி வீதி­யில் நீர்­பா­சன் குழாய்­களை நிலத்­தில் புதைக்கும் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கிடங்கு தோண்­டும் பணி­யில், நீர்­ப்பாச­னத் திணைக்­க­ளத்­தின் இரண்டு ஜே.சி.பி. இயந்­தி­ரங்­கள் நேற்று மாலை­யும் ஈடு­பட்­டன. இதன்­போது அந்த வீதி­யால் உழவு இயந்­தி­ரம் வந்­துள்­ளது.ஜே.சி.பி. இயந்­தி­ரத்­தி­னால் கிடங்கு தோண்­டும் பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கும்­போது, வீதி­யில் பய­ணிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது. இதன்­போது உழவு இயந்­திர சார­திக்­கும், அங்கு பணி­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்த பெரும்­பான்­மை­யின பணி­யா­ளர்­க­ளுக்­கும் இடை­யில் வாய்த் தர்க்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

சிறிது நேரத்­தில் அந்­தப் பகு­தி­யில் சுமார் 10 இளை­ஞர்­கள் அங்கு வந்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் 30 வய­துக்கு குறை­வா­னர்­கள். அவர்­க­ளது கையில் பொல்லு, தடி இருந்­தது. ஜே.சி.பி. இயந்­தி­ரத்­தின் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர்.

இந்­தக் குழப்­பங்­க­ளைத் தடுக்­கச் சென்ற மத­குரு ஒரு­வர் இளை­யோ­ரால் அவ­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். பொலி­ஸா­ருக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டும் அவர்­கள் உட­ன­டி­யாக அங்கு வர­வில்லை.

ஜே.சி.பி. இயந்­தி­ரம் தாக்­கப்­பட்­டும், அதில் பணி­பு­ரிந்த பெரும்­பான்­மை­யி­னப் பணி­யா­ளர் காய­ம­டைந்­தும் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்ட பின்­னர் அவர்­கள் வழங்­கிய தக­வ­லுக்கு அமை­வா­கவே பொலி­ஸார் அங்கு வந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர் –– என்­றார்.
இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Previous Post

காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமை

Next Post

செல்­லப் பிரா­ணி­யை­யும் :அழைத்து வந்த அகதிகள்

Next Post

செல்­லப் பிரா­ணி­யை­யும் :அழைத்து வந்த அகதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures