சமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை கூறியுள்ளார்.
இலங்கைக்கு வந்து சென்ற இந்திய வெளிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பில், தற்போது மேசையில் 13ஆவது திருத்தமே இருக்கின்றது.
முதலில் இருப்பதை பெற்றுக் கொள்ளுங்கள்
அதனையே நடைமுறைப்படுத்தாத அரசாங்கம் எப்படி நீங்கள் அதற்கு அப்பால் கோருவதை நடைமுறைப்படுத்தும்? முதலில் இருப்பதைப் பெற்றுக் கொண்டு அதற்கு மேல் பெறுவதற்கு முயற்சியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபாணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பதிலளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்ற கருத்தை மீண்டும் முன்வைத்திருந்தார். தமிழ்த் தரப்புக்கள் அதனை நிராகரித்திருந்தன.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொழும்பு ஊடகம் என்று கேள்வி எழுப்பியிருந்தது.
கருத்து மோதல்கள் வேண்டாம்
இதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், “நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். சொல்லாடல்களை வைத்து கருத்து மோதல்கள் வேண்டாம்.
கிடைக்கின்ற அதிகாரங்களை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள்! ஜெய்சங்கரின் வழியில் ரணிலும் தெரிவிப்பு | Ranil Wickramasighe Statement
அதேவேளை ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்று நான் கூறியது உண்மை. அந்த நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருக்கின்றேன்.
இந்தநிலையில் சொல்லாடல்களை வைத்து கருத்து மோதல்கள் வேண்டாம். கிடைக்கின்ற அதிகாரங்களை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள்.
இதைவிடுத்து சமஷ்டி என்று முட்டி மோதுவதால் அது வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் இன ரீதியில் விரிசல்களை மேலும் அதிகரிக்கவே செய்யும். இதை சம்பந்தப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் கவனத்தில் கொள்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.