ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு,ஆக்ரமிப்பு காஷ்மீரின் முசாபர்பாத் பகுதியிலிருந்து தொலைக்காட்சி மூலம் நேற்று உரை நிகழ்த்திய அவர், பாகிஸ்தானுக்குரிய காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருப்பதாக தமக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
நட்பை வலுப்படுத்த இந்தியா ஒரு அடி எடுத்தால் பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கும் என்றும் இம்ரான்கான் தெரிவித்தார்.

