காஷ்மீரில் மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கி, வெடித்து சிதறி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் பலியாகி உள்ளனர். இந்திய விமானப்படை தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது.
நேற்று இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக விமானம் இதில் தாக்குதல் செய்ய பயன்படுத்தப்பட்டது.
மொத்தம் 12 விமானங்கள் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது. இதற்கு இடையில்தான் தற்போது இந்த போர்விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்தியா பயிற்சி இந்த நிலையில் இன்று இந்தியா தற்போது தீவிரமாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்கி வருவதால் இந்தியா தீவிரமாக போர் பயிற்சி செய்து வருகிறது. இந்த போர் பயிற்சியில் தற்போது எதிர்பாராத வகையில் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு
மிக் 21 காஷ்மீரில் மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் பலியாகி உள்ளனர். பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் விபத்தில் பலியாகி உள்ளனர்.
கட்டுப்பாடு இழந்தது பயிற்சி செய்து கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானமே வெடித்து சிதறிய காரணத்தால் விமானத்தில் இருந்து விமானிகள் வெளியேற முடியவில்லை. இதனால்தான் இந்த இறப்பு நிகழ்ந்து உள்ளது.
எங்கு நேற்று தாக்குதல் நடந்த புட்காம் பகுதிக்கு 7 கிமீ தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது.
நேற்றுதான் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று இந்த அசம்பாவிதம் நடந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.