Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்

February 22, 2018
in News, Politics, World
0

காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள் மீது கடந்த 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டு இருந்தது.

இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.

பின்னர் கடந்த 19-ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக 22-ந் தேதி காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அரசு அறிவித்தது.

அதன் படி இன்று கூடிய அனைத்து கட்சி கூட்டம் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த் கூட்டத்தில் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, சீமான், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன்,திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், வாசன், எல்.கே.சுதீஷ், கிருஷ்ணசாமி, தமிமுன் அன்சாரி, கொங்கு ஈஸ்வரன், சரத்குமார், கருணாஸ்,செ.கு.தமிழரசன், வேல்முருகன், கிருஷ்ணசாமி,கதிரவன், ஜான்பாண்டியன், ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், புதிய நீதிக்கட்சி ரவிக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அரசுக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க எதிர்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். காவிரி விவகாரத்தில் அரசு எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தவும் என வலியுறுத்தினார்.காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும். சுப்ரீம் கோர்ட்டால் குறைக்கப்பட்ட நீரைப் பெற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ள 16.2.2018- ந்தேதியிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க நாம் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும். இங்கே இருக்கின்ற அனைத்துக் கட்சி தலைவர்களையும் முதல்வர் அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து முதலில் “காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக் கொடுங்கள்” என்று வலியுறுத்த வேண்டும். என கூறினார்.

Previous Post

கட்சி கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கம்

Next Post

அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபட வேண்டும்

Next Post

அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures