காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானியவிலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். இதில் பேசிய முதலமைச்சர்,“ இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் இருபத்தைந்து ஆயிரம்ரூபாய் வரை வழங்கப்படும்” என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ மற்றும் ‘காவிரி நீர் முறைப்படுத்தும் குழு’ ஆகியவற்றை உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.