காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழகத்துக்கு மிகப்பெரிய அநீதி என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரின் இன்று செய்தியாளர்களுடன் பேசிய துரைமுருகன், அ.தி.மு.க. அரசு காவிரி வழக்கை சரியாக நடத்தவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட யாருடைய யோசனைக்கும் அ.தி.மு.க. அரசு செவிமடுக்கவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.