காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் விடுமுறையில் சென்றுள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரும் பணிக்கு வருகைத்தர வேண்டும்.
எனினும் கொவிட் வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பணிக்கு திரும்பவேண்டிய அவசியமில்லை. தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்ததன் பின்னர் அவர்கள் பணிக்கு சமூகமளிப்பது போதுமானது.
இதேவேளை , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை அடையாளம் காணுவதற்காக காவல்துறையினர் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.