மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது.
இவ்வாறு காற்று தரச்சுட்டெணில் ஏற்படும் மாற்றம் சுவாச கோளாறுகளை கொண்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருகை தர ஆரம்பித்தன.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.
இந்நிலையான தற்போது சற்று குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன தரவுகளின் ஊடாக அறியமுடிகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண்ணின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Massive Change In Air Quality Weather Sri Lanka
இதன்படி காற்று தரச்சுட்டெண், யாழ்ப்பாணத்தில் 97 ஆகவும்,தம்புள்ளையில் 86 ஆகவும், கம்பஹாவில் 82 ஆகவும், நீர்கொழும்பில் 78 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 72 ஆகவும், கொழும்பில் 70 ஆகவும், கண்டியில் 70 ஆகவும், இரத்தினபுரியில் 53 ஆகவும், நுவரெலியாவில் 29 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை 101 முதல் 150 வரையிலான காற்றுத் தரச்சுட்டெண், சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினருக்கு ஆரோக்கியமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் இதனால் முககவசத்தை அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.