பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான் பிரதமர் இல்லத்துக்குப் பதில் ராணுவச் செயலாளர் இல்லத்தில் வசிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
பாக்., பிரதமர் இல்லத்திற்கு என 524 பணியாளர்கள், 80 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கார்கள் 33 குண்டு துளைக்க முடியாதவை.
ஆடம்பரம் வேண்டாம்:
இவற்றை ஆடம்பரச் செலவு என்று கருதுவதாக இம்ராம்கான் அறிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தின் பனிகலா பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே வசிக்க விரும்பியதாகவும், அதிகாரிகள் பாதுகாப்புக் காரணங்களை கூறியதால் ராணுவ செயலாளரின் 3 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டில் வசிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு 2 பணியாளர்களும் 2 கார்களும் மட்டும் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.

