தமிழ் திரையுலகின் முன்னணி வசூல் நட்சத்திர நடிகரான கார்த்தி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘மார்ஷல் ‘என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்புடன் தொடங்கிய இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான தமிழ் இயக்கத்தில் உருவாகும்’ மார்ஷல் ‘ திரைப்படத்தில் கார்த்தி ,பிரபு ,சத்யராஜ், கல்யாணி பிரியதர்ஷன், லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
பீரியாடிக் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, எஸ். ஆர். பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் படப்பிடிப்புடன் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே கார்த்தி நடிப்பில் உருவான ‘ சர்தார் 2’ திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளில் படமாளிகையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.