ஒவ்வொரு மாதம் வரும் சஷ்டி விரதம் மற்றும் சிறப்புமிக்க கார்த்திகை மாத சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரங்களை எல்லாம் வாரி வழங்குவார் முருகன்.
முருகனை வழிபட சஷ்டி சிறந்த நாளாக இருந்து வருகிறது. குறிப்பாக சஷ்டி விரதம் இருந்தால் திருமண தடை அகலும். யார் யாருக்கு என்னென்ன பிரச்சனைகள் இருந்தாலும் அவை அத்தனையும் தவிடு பொடியாக்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்குவார். முருகனை நம்புபவர்களுக்கு தோல்வியே கிடையாது.
சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் மது, மாமிசம், தொடக் கூடாது. அது போல் சைவத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு கட்டாயம் சேர்க்க கூடாது என்பது நியதி. நீங்கள் சமைக்கும் பொழுது வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் சமைத்து சாப்பிடலாம். முருகப் பெருமானின் படத்தை பூஜை அறையில் வைத்து அவருடன் அவருடைய பெற்றோர்களாகிய எம்பெருமான் ஈசன் மற்றும் பார்வதி தேவியின் படத்தையும் வைத்து விளக்கேற்ற வேண்டும். சஷ்டி விரதத்தின் போது முடியாதவர்கள் பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அதாவது கணவன் மனைவி, சகோதர சகோதரிகள், தாய் சேய் என எந்த உறவில் விரிசல்கள் இருந்தாலும் அதனை சரிசெய்ய கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளலாம். உறவில் சந்தேகம் போன்ற விஷயங்கள் இருந்தால் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வது சிறந்த பலன்களை தரும்.
சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு தொழில் வியாபார வளர்ச்சி உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். முருகப் பெருமான் சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த நாட்களில் தண்ணீர் மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் புதிய ஆடை சாற்றி, அலங்காரம் செய்ய வேண்டும். சஷ்டி விரத நாட்களில் சஷ்டி கவசம் பாட வேண்டும். இவைகளை செய்து மனமுருக முருகப்பெருமானை வணங்கினால் நோய் நொடி இன்றி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இனி சஷ்டி விரதத்தை அனைவரும் மேற்கொண்டு நாமும் நல்ல பலன்களை பெறலாம்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]