காரைதீவு கடற்கரையில் இன்று 01ம் திகதி அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. இன்று காலையில் கரைவலை மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கே இவ்வாறு அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டன.கடந்த ஒரு வாரமாக காரைதீவில் அதிகமான மீன்களை கரைவலை மூலம் மீனவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.
ஒரு கிலோ கீரிமீன் 150ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் மீனவர்களினதும் மீன் வியாபாரிகளினதும் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டதோடு கருவாடாக மாற்றும் நோக்கில் பீப்பாய்களில் அடைக்கப்பட்டும், இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதை வழமையை விட அதிகளவான மீன் வியாபாரிகள் இன்று காரைதீவு கடற்கரையில் திரண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
