Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

காமெடி ஹாரர் படத்தில் கதையின் நாயகியாக ஹன்சிகா

March 1, 2022
in Cinema, News
0
காமெடி ஹாரர் படத்தில் கதையின் நாயகியாக ஹன்சிகா

நடிகை ஹன்சிகா மோத்வானி பெயரிடப்படாத காமெடி ஹாரர் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Actress Hansika in R.Kannan sci-fi fantasy, horror comedy film

இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்க நடிகை ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த படத்திற்கு சித்தார்த் சுபா வெங்கட் வசனம் எழுத, கபிலன் வைரமுத்து பாடல்களை எழுத, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘அரண்மனை’ படத்தில் பேயாக நடித்து ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகை ஹன்சிகா மோத்வானி மீண்டும் அறிவியல் புனைவுடன் கூடிய காமெடி ஹாரர் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

Happy Birthday, Hansika Motwani: 5 interesting facts about the actress you  must know | The Times of India

இந்த படத்தை பற்றி இயக்குநர் ஆர். கண்ணன் பேசுகையில், ” நேத்ரா என்ற இளம் விஞ்ஞானி வேடத்தில் ஹன்சிகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன பாணியில் ஆய்வுக்கூட அரங்கம் ஒன்று பிரம்மாண்டமான பொருட்செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது. 45 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்து, ஓகஸ்டு மாதத்தில் வெளியிடும் வகையில் பணிகளை திட்டமிட்டு செய்து வருகிறோம். ” என்றார்.

Actress Hansika in R.Kannan sci-fi fantasy, horror comedy film

இயக்குநர் ஆர். கண்ணன் தற்போது ‘காசேதான் கடவுளடா’ என்ற படத்தையும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படங்களின் வெளியீடு குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகை ஹன்சிகா தற்போது ‘மகா’, ‘ரவுடி பேபி’ இயக்குநர் விஜய் சந்தர் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous Post

வவுனியாவில் “நீலங்களின் சமர் ” கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

Next Post

தனுஷின் ‘மாறன்’ பட முன்னோட்டம் வெளியீடு | காணொளி இணைப்பு

Next Post
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ் | வைரலாகும் புகைப்படம்

தனுஷின் 'மாறன்' பட முன்னோட்டம் வெளியீடு | காணொளி இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures