Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காமராஜர் நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார்!

August 8, 2018
in News, Politics, World
0

தி.மு.க தலைவர் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருணாநிதி
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு, பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தாலும், அவ்விடத்தை ஒதுக்கீடுசெய்ய இயலவில்லை.

அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிராதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே, காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்துக்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடுசெய்யத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலிசெலுத்த ஏதுவாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலை ஒதுக்கவும், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அந்தத் தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாகவும், தலைமைச் செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கருணாநிதியின் இறுதிச் சடங்கு அன்று (9.8.2018) ஒருநாள் விடுமுறை அளிக்கவும், தமிழக அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கவும், அந்தக் காலத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு சார்ந்த விழாக்கள் ரத்துசெய்யப்படும் எனவும், தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

Previous Post

`நாட்டின் மூத்த தலைவரை இழந்துவிட்டோம்!’ – கருணாநிதி மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல்

Next Post

கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது..! சீமான்

Next Post

கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது..! சீமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures