காபுல் நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலை அடுத்து நேற்று சனிக்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேற்று சனிக்கிழமை ஆஃப்கானின் தலைநகர் காபுலில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 95 பேர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 158 பேர் காயமடைந்திருந்தனர். மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நேற்று சனிக்கிழமை நள்ளிரவு, ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
‘இன்று (நேற்று) நள்ளிரவு ஈபிளின் விளக்குகள் அணைக்கப்பட உள்ளது. காபுல் நகர மக்களின் துயரில் பரிஸ் நகர மக்களும் பங்கேற்கின்றனர்!’ என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ டுவிட்டரில் அறிவித்திருந்தார்.