கன்னட மொழியில் தயாராகி மாபெரும் வசூல் வெற்றியை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு எதிர்வரும் 15ஆம் திகதியன்று வெளியாகிறது.
தற்போது இப்படத்தின் முன்னோட்டம் நடிகர் கார்த்தியால் அவரது இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ரிஷப் ஷெட்டி கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’.
இவருடன் கிஷோர், அச்யுத்குமார், பிரமோத் ஷெட்டி, நடிகை சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.
கர்நாடக மண்ணின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான கம்மாள விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தை ‘கேஜிஎஃப்’ படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரண்கதூர் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படம் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியானது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம், உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.