Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

காதலில் விழுந்த பிரபலங்கள்! ரகசியம் என்ன? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

October 19, 2016
in Cinema, News
0

காதலில் விழுந்த பிரபலங்கள்! ரகசியம் என்ன? ஸ்பெஷல் ரிப்போர்ட்!

 படங்களில் நடிகர், நடிகைகள் காதல் செய்ததை பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையில் காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களை பற்றிய தகவல் முன்வைக்கிறோம் இன்று.

ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய காதலை அறிந்துகொண்டது ஒரு பேட்டியில். ஆம், பேட்டியெடுத்தவர் லதா அப்போது கல்லூரி மாணவி. இப்போது அவரது மனைவி.

திருமணமானது பிப்ரவரி 29, 1981.

கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் 1978 இல் பிரபல நடன பயிற்றுனர் வாணி கணபதியை திருமணம் செய்து விவாகரத்தாகி பின் சரிகாவை 1987 க்கு பிறகு திருமணம் செய்தார். பின் கவுதமியுடன் சேர்ந்து வாழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

அஜித்

அதிகமான ரசிகர்களின் மனதை வென்ற அஜித், ஷாலினியை அமர்க்களம் படத்தின் மூலம் சந்தித்தார். பின் தன் காதலை 1999 இல் ஷாலினியிடம் தெரிவிக்க, பெற்றோர் சம்மத்தோடு 2000, ஏப்ரல் மாத்தில் திருமணமானது.

விஜய்

விஜய் மனைவி சங்கீதா அவரின் தீவிரமான ரசிகையாம். லண்டனில் இருந்த அவர் விஜய் சந்திப்பதற்காக விஜய் வீட்டிற்கு வந்து லண்டன் விருந்துக்கு அழைத்தாராம். இவர்களுடைய நட்பை அறிந்த சந்திரசேகர், இரண்டாவது முறையாக சங்கீதா வீட்டிற்கு வந்த போது என் மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

திருமண பேச்சால் காதலானது. 1999 ஆகஸ்ட் 25 இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

சூர்யா

கோலிவுட்டில் முன்னா நடிகரான சூர்யா ஜோதிகாவை 2011 செப்டம்பர் 6 இல் திருமணம் செய்து கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தொடந்து நிறைய படங்களில் நடிக்க நட்பு காதலானது.

சொல்லாமலே ஒருவரை ஒருவர் காதல் செய்த இவர்கள் இருவீட்டார் சம்மதத்திற்காக இவர் 5 வருடங்களுக்கு மேலாக பொறுத்திருந்தார்களாம்.

சாந்தனு பாக்யராஜ்

சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள இவர் தனது மனைவியான கீர்த்தியுடன் ஸ்கூல் படிக்கும்போது முதல் நட்பிலிருந்திருக்கிறாம். இவர்களை துரத்திய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே 2015 இல் திருமணம் செய்து கொண்டார்கள்.

பிரசன்னா

2009 இல் அச்சமுண்டு அச்சமுண்டு ஷூட்டிங்கில் சந்தித்த இவர்கள் ஒருவரை ஒருவர் மறைமுகமாக பார்க்க ஆரம்பித்து, நட்பாகி, காதலாகி பின் சினேகா வீட்டில் திருமண பேச்சை ஆரம்பித்த போது விஷயத்தை வெளியே சொல்லி ஒரு வழியாக திருமணம் 2012 இல் இனிதே நடந்தது.

இன்னும் காதல் திருமணத்திற்காக தன்னுடைய காதலை ஆழமாக்கி கொண்டிருக்கும் பிரபலங்கள் உண்டு. வரும் காலத்தில் கரம் கோர்க்க காத்திருக்கும் அவர்களை பற்றி இன்னொரு ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.

Previous Post

ஜெயம் ரவியின் போகன் திருடபட்ட கதையா ? அதிர்ச்சி தகவல்

Next Post

மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடி கெத்து காட்டிய பாகிஸ்தான்

Next Post
மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடி கெத்து காட்டிய பாகிஸ்தான்

மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடி கெத்து காட்டிய பாகிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures