தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சந்தோஷ் சோபன் தமிழில் கதையின் நாயகனாக நேரடியாக அறிமுகமாகும் ‘ கப்புள் ஃப்ரண்ட்லி ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ கப்புள் ஃப்ரண்ட்லி’ எனும் திரைப்படத்தில் சந்தோஷ் சோபன்- மானசா வாரணாசி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதித்யா ரவீந்திரன் இசையமைத்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் தம்பதியினரை பற்றிய கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை யு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… இந்தத் திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

