வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கும் விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் காணிளை விடுவிப்பத்திலும், அவ்வாறு விடுவிடுக்கப்படும் காணிகனை பகிர்ந்தளிப்பதிலும் பல குழப்பநிலைகள் நீடித்துவருகின்ற நிலையில், வெளிநாட்டு ஊடகமொன்று இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கும் விடயத்தில் ஒரு பக்கத்தின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு செயற்படக்கூடாது.
அங்குள்ள காணிகளின் உரிமையாளர்கள் நீண்டகாலமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவிட்டு, தற்போது நாடு திரும்பி அவற்றுக்கான உரிமையை கோருகின்றனர்.
ஆனால் அவர்களுக்காக கடந்த 30 வருடங்களாக குறித்த காணிகளில் வசித்து வந்த மக்களை வெளியேற்றுவது நியாயமில்லை.
எனவே இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுத்து, அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.