வடக்கின் அனைத்து மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அரச தலைவர் மைத்திரிபால சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்பு நாளை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து தலா ஒருவர் வீதம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவர்கள் மாவட்ட செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பு அழைத்துச் செல்லப்படுவர் என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் கடந்த 200 நாள்களுக்கு மேலாக கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.