வடக்கு -– கிழக்கு மாகாணங்களில் 500 நாள்களுக்கு மேலாகப் போராடிவரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் தாமரை தடாக கலையரங்குக்கு முன் இன்று மாலை 4 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 510 நாள்களையும், வவுனியாப் போராட்டம் 503 நாள்களையும், முல்லைத்தீவுப் போராட்டம் 492 நாள்களையும், யாழ்ப்பாணம் போராட்டம் 483 நாள்களையும், திருகோணமலைப் போராட்டம் 498 நாள்களையும் எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

