காடழிப்பிற்கும்குறிப்பிட்ட நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
காடழிப்பிற்கும் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கும் இடையில்தெளிவான தொடர்புள்ளதை விஞ்ஞானிகள் முதல் தடவையாக நிரூபித்துள்ளனர்.
தங்களின் இந்த முடிவு அமேசன்;கொங்கோ பேசின் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அரசாங்கங்களும் விவசாயிகளும்அதிக மரங்களை நடுவதற்கு தூண்டுதலாக மாறும்என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
வெப்பமண்டலநாடுகளில் மழைக்காடுகள்அதிகளவிற்கு அழிக்கப்பட்டால் விவசாயிகள் தங்கள் பயிர்கள் மற்றும்கால்நடைகளிற்கு மழையை நம்பியிருக்க முடியாத நிலைஅதிகளவிற்கு காணப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது
ஜேர்னல்நேச்சரில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.
அமேசனில் காடழிப்பு ஒரு ஆபத்தான கட்டத்தை அடைகின்றது இதன் பின்னர் மழைக்காடுகள் தங்கள் மழைகளைதாங்களே உற்பத்தி செய்ய முடியாத நிலையேற்படும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.