Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது –  ஐ.நா. விசாரணை ஆணைக்குழு

September 16, 2025
in News
0
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது –  ஐ.நா. விசாரணை ஆணைக்குழு

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடங்கிய கடந்த 22 மாதத்தில் பாலஸ்தீனர்கள் குறைந்தது 64,905 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார். இக்குழு தனது விசாரணையை முடித்து 72 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என வரையறுக்கப்பட்ட 5 செயல்களில் 4 காசாவில் நடந்துள்ளது. அதாவது, ஒரு குழுவின் (ஹமாஸ்) உறுப்பினர்களைக் கொல்வது, உடல் மற்றும் மன ரீதியில் கடுமையான தீங்கை விளைவிப்பது, குழுவை அழிக்கும் நோக்கில் நிபந்தனைகளை ஏற்படுத்துவது, பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள், ராணுவத்தின் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், மருத்துவர்கள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள், போர் தொடங்கியதில் இருந்து தொகுக்கப்பட்ட செயற்கைக்கோள் பட பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் இந்த அறிக்கையை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள இஸ்ரேல் தூதுவர் கூறுகையில், “ஐ.நா. மனித உரிமை ஆணையம் இஸ்ரேலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது” என தெரிவித்துள்ளார்.

Previous Post

திருகோணமலை முத்து நகர் விவசாய காணிகளுக்கு சஜித் பிரேமதாச கள விஜயம்

Next Post

14ஆவது முறையாக உலக சாதனை படைத்த கோலூன்றிப் பாய்தல் வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ்

Next Post
14ஆவது முறையாக உலக சாதனை படைத்த கோலூன்றிப் பாய்தல் வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ்

14ஆவது முறையாக உலக சாதனை படைத்த கோலூன்றிப் பாய்தல் வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures