காசாவிலிருந்து வெளியேறமுயன்றவேளை பாலஸ்தீன கவிஞர் மொசாப் அபு டொகா இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கவிஞரின் பிள்ளைகளில் ஒருவர் அமெரிக்கர் என்பதால் அவர் எகிப்திற்கு செல்லலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர் எகிப்திற்கு செல்ல முயன்றவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வடகாசாவிலிருந்து தென்காசாவை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரவா எல்லையை நோக்கி சென்றுகொண்டிருந்தவேளை அவரையும் ஏனைய பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேலிய படையினர் கைதுசெய்துள்ளனர் என அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்
அமெரிக்க தூதரகமே அவரது குடும்பத்துடன் ரபாவிற்கு செல்லுமாறு கே;ட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் அவரது மகனிற்கே எகிப்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது கவிஞருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனினும் பின்னர் அவருக்கும் குடும்பத்தினருக்கும் அனுமதி கிடைத்தது என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்ல முயன்றவேளை அவரையும் பலரையும் இஸ்ரேலிய படையினர் தடுத்துநிறுத்தினர் அவர்களை கைகளை உயர்த்தச்சொன்னார்கள் மகனை கீழே இறக்கிவிடச்சொன்ன பின்னர் இஸ்ரேலிய இராணுவத்தினர் அவரையும் 200 பேரையும் இழுத்துச்சென்றனர் என கவிஞரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இஸ்ரேலிய படையினரோ இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
அபுடோகா வடகாசாவில் குண்டுவீச்சிற்கு மத்தியில் வாழ்வது குறித்த தனது அனுபவத்தை நியுயோர்க்கர் சஞ்சிகைக்கு எழுதிவந்துள்ளார்.