நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேகத்திலிருந்து 30.12.2017 அன்று பெண்ணின் சடலம் ஒன்று காலை 11 மணியளவில் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஒஸ்போன் தோட்டம் காசல்ரீ பிரிவைச் சேர்ந்த திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயான சுந்தரலிங்கம் சிவகுமாரி 29 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இப்பெண் காச நோயாள் பாதிக்கப்பட்டதனால் இவர் மனமுடைந்து 30.12.2017 அன்று அதிகாலை வேளையில் சென்று நீர்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸாரால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

