கொழும்பு நகர திண்மக் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தும் வகையில் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ‘மேல் மாகாண குப்பைகள் மின் உற்பத்திக்கு’ எனும் தொனியில் இன்று(17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த இந்த பாரிய கழிவு முகாமைத்துவ திட்டத்தை அமைக்கும் எண்ணக்கருவை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் பெருநகர்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினதும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினதும் ஒத்துழைப்புடன் பெயார்வே வேஸ்ட் மேனேஜ்மெண்ட் எனும் தனியார் நிறுவனத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கரதியான கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் நாள்தோறும் சேகரிக்கப்படும் பெருமளவான கழிவுகளில் இருந்து இத்திட்டத்தின் மூலம் சுமார் 500 மெற்றிக் தொன் அளவை மின்சாரமாக மாற்றக்கூடிய நிலை உள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.
இன்னும், குறித்த திட்டத்தினால் சுமார் 37,500 வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்க முடியுமாக உள்ளதோடு மின்சாரத்திற்கு மேலதிகமாக கூட்டு உரமும் தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.