ராமநாதபுரத்தில் முறையான இடம் தேர்வு செய்யாமல், மெயின் ரோடு அருகிலேயே கழிப்பறைகளை கட்டியதால் பொதுமக்கள் குமுறலில் உள்ளனர்.
தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, ஊர்பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் ஒரேஇடத்தில் ‘சமுதாய கழிப்பறை’ என்ற பெயரில், குளிக்கும் வசதியுடன் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதை தொடர்ந்து தனிநபர் கழிப்பறை திட்டம், வீடுவீடாக செயல்படுத்தப்பட்டது.இத்திட்டத்திலும் சில வீடுகளில் கழிப்பறை கட்ட இடவசதியில்லாமல் திட்டம் கிடப்பில் இருந்தது. இதை தொடர்ந்து தொகுப்பு கழிப்பறை திட்டம்என்ற பெயரில், பொது இடங்களில் வரிசையாக கழிப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.இத் தொகுப்பு கழிப்பறை திட்டத்தின்கீழ் கோவிலுார் ஊராட்சி ராமநாதபுரத்தில், மெயின் ரோடு அருகே 37 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கழிப்பறை கட்ட ஆரம்பித்ததில் இருந்தே பொது மக்கள் தொடர் புகார் எழுப்பி வருகின்றனர்.
கோவிலுார் – -அழகாபுரி மெயின் ரோடு அருகிலேயே,கடைகளுக்கு கட்டடம் கட்டுவது போல், கழிப்பறையை வரிசையாக கட்டுகிறார்கள்என்று மனம் குமுறினர். இந்த கழிப்பறைகளை பயனாளிகள்முழுமையாக பயன்படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே என்று தெரிவித்தனர்.
ஒப்பந்ததாரர் ஜெகனிடம் கேட்டபோது, ‘இந்த ஊரில் பொது இடம் எதுவும் இல்லாததால், ஒன்றியஅதிகாரிகள் ரோட்டோரம் இடம் தேர்வு செய்து தந்தனர். அதில் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன, என்றார். இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.