Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கல்முனை பிரதேச செயலகம் ;தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான விடயம்!

May 8, 2021
in News, Politics, World
0

கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று செங்கலடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தற்பொழுது அண்மையில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் இந்த கல்முனை பிரதேச செயலகம் விடயம்.

கடந்த காலத்தில் இந்த கல்முனை பிரதேச செயலக பிரச்சனையை சிறந்த முறையில் முன்னெடுத்து ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சர்களுக்கு பிரதம மந்திரி மற்றும் பல துறை சார்ந்த அதிகாரமிக்க அமைச்சர்களிடம் அனைவரிடமும் நாம் இந்த விடயம் தொடர்பாக முன்னெடுத்து வந்தோம். இந்த வேலை திட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது உண்மையில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகூட இது நீண்டகால பிரச்சனையாக உருவெடுத்து தற்பொழுது முடிவுறும் தருவாயில் இதற்கான முடிவுகளை நிறைவேற்றும் அல்லது முடிவுறும் கட்டத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்டு பல அரசியல்வாதிகள் இதை அரசியலாக்கி அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்காக இந்த பிரதேச செயலகத்தை பயன்படுத்தி இன்று அனைவரின் வாயைத் திறந்தால் அதுதான் கதையாக உள்ளது.

இது அம்பாறை மக்களின் வாக்கு பிரச்சனை அல்ல எமது இனத்தின் இருப்பை பாதுகாப்பதற்கான ஒரு பிரச்சனை ஆகவே இந்த இடத்தில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் நான். இது தொடர்பாக எங்களுடன் சேர்ந்து அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் பிரதிநிதித்துவங்கள் அனைவருக்கும் இது சம்பந்தமாக கதைப்பதற்கு உரிமை உள்ளது ஆனால் அதை உரிய முறையில் நாகரீகமான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள். அதற்காக அவர்கள் ஒத்துழைத்து வருபவர்களாக இருந்தால் நாம் அதை உண்மையிலேயே வரவேற்கின்றோம்.

அனைவரது ஒத்துழைப்பும் இதற்கு தேவைப்படுகின்றது. அதைவிடுத்து நான் தான் இதை செய்கின்றேன் நான் தான் இதை செய்கின்றேன் என போட்டி போட்டு தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கேலிக்கூத்தாக அனைவரும் அணிதிரண்டு ஒன்றாக இந்த கல்முனை பிரதேச செயலகத்தில் ஒன்றாக நிற்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது உங்களுக்கு தெரியும் நாடகமாடுகிறது கடந்த அரசாங்கத்தில் ஆட்சியை மாற்றுகின்ற அல்லது ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தும் கல்முனை விடயத்தை அவர்கள் செய்யமுடியாமல் போனது. அன்று அவர்கள் நிபந்தனைகளுடன் பலமாக இருந்து இருந்தால் அதை இலகுவாக நிறைவேற்றி இருக்கலாம் ஆனால் தற்பொழுது அது சம்பந்தமாக பிரச்சாரத்தை மேற்கொள்வது தொடர்பான விவாதத்தை மேற்கொள்வதும் ஏமாற்றிவிட்டார்கள் என்றே பார்க்கின்றோம் ன. ஆகவே அனைத்து மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். ஜனாதிபதியாக இருக்கலாம் பிரதம மந்திரியாக இருக்கலாம் யாரையும் நான் சந்திக்கின்ற போதும் இந்த கல்முனை பிரதேச செயலக விடயத்தைதான் நான் முதலாவதாக பேசுகின்றேன். அமைச்சர் சமல் ராஜபக்சவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரங்கள் தயாரித்து கொண்டிருக்கின்றார். இது தொடர்பான அனைத்து விளக்கங்களும் விபரங்கள் அவரிடம் உள்ளது நாம் அதை அவரிடம் வழங்கி இருக்கின்றோம்.

கல்முனை பிரதேச செயலகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தங்கள் வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதை நான் மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். பிரதேச செயலாளராக இருக்கலாம் யாராகவும் இருக்கலாம். அவர்களும் அரசியல்வாதிகள் போல் செயற்பட்டு இதை ஒரு பூதாகரமான பிரச்சனையாக உருவாக்குவதாக இருந்தால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் ஆகவே இவ்விடத்தில் அனைவரும் பொறுமையாக இருந்து செயற்பட வேண்டும் என்பதை நான் மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அவர்களின் வாயால் வழங்கப்பட்ட வாக்குறுதி பிரதம மந்திரியால் அளிக்கப்பட்ட வாக்குறுதி இதை ஒரு அரசு கூறிவிட்டு மக்களை ஏமாற்றும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அதன் காரணமாகத்தான் நாம் அடித்து கூறுகின்றோம் இதை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது. ஆகவே இதை அரசிடன் நான் வலியுறுத்தி இருக்கின்றோம் இதற்காக அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து நிற்க வேண்டும் என்பதுதான் எமது அன்பான வேண்டுகோள்.

உண்மையிலேயே இந்தப் பிரதேச செயலக விடயம் தரம் குறைக்கப்படவில்லை. ஏற்கனவே ஒரு பத்திரம் இருக்கின்றது 1993-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட ஒன்றாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பும் உள்ளது. தற்பொழுது திடீரென்று இந்தப் பிரச்சனை பூதாகரமாக அதற்கு இதுவும் ஒரு காரணம் ஏனென்றால் இந்தப் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட்டதாககருதப்பட்டால் பல விடயங்களை செய்ய முடியாமல் இருக்கும் அதற்காக இதை ஒரு உப செயலகம் என்ற அடிப்படையில் தெரியப்படுத்தி அதற்கான சகல விபரங்களையும் தற்பொழுது மாவட்ட அரசாங்க அதிபருக்கு கட்டளையாக வந்திருக்கின்றது இந்த கல்முனை பிரதேச செயலகத்தின் அனைத்து விளக்கங்களையும் விடயங்களையும் எல்லை நிர்ணயங்கள் தொடர்பான விடயங்கள் பற்றியும் அனுப்பி வைக்கும்படி கேட்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைவரும் அரசாங்க அதிபருடன் உரையாடலாம் அவருடன் உரையாடினால் இது தொடர்பான விடயங்கள் தெரியும். இது ஒரு பாதிப்பை தரப்போவதில்லை ஆகவே இது சம்பந்தமாக பல தடவை நான் அமைச்சரவையில் கலந்துரையாடி உள்ளேன் அவர்கள் இதுபோன்ற தகவல்களை ஏதும் தெரிவிக்கவில்லை தரம் உயர்த்துவது என்றுதான் வாக்குறுதி அளித்துள்ளனர்.

எம்மைப் பொறுத்தவரையில் மக்களை ஒரு அரசியலுக்காக பகடைக்காயாக பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை. ஏனென்றால் காரணம் எமது மக்களின் உரிமை எமக்கு மிகவும் முக்கியமான விடயம் தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விடயம் அதற்காகத்தான் நாம் குரல் கொடுத்து வருகின்றோம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் ஏற்கனவே நான் கூறியதைப் போன்று கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம் ஆகவேதான் அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார ரீதியாக தற்போது அரசாங்கம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி கொண்டு வருகின்றது ஏனைய நாட்டு உதவிகள் வருவது என்பது முடியாத விடயம் ஏனென்றால் கொரோனா இது எம் நாட்டிற்கான பிரச்சனை மட்டுமல்ல அனைத்து உலகத்திற்கான பிரச்சனை ஆகவே அரசாங்கத்தை நாம் குற்றம் சாட்ட முடியாது. இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போன்று இன்று பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது உண்மையிலேயே அது ஒரு பாராட்டுக்குரிய விடயம் அதேபோல் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இது போன்று பல நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது எங்களை மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பிரதம மந்திரி அவர்களின் காரியத்தை நேரடியாக இணைத்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளோம் உண்மையில் இந்த கல்முனை கல்முனை விடயம் தொடர்பாக மதிப்பிற்குரிய பிரதம மந்திரி கல்முனையில் உள்ள முக்கிய பிரதிநிதிகளை அழைத்து வரும்படி கூறி இருந்தார். அனைத்து ஆயத்தங்களை நாம் முன்னெடுக்கின்ற போதும் தற்பொழுது இந்த கொரோனா அச்சம் காரணமாக அனைத்தும் தடைபட்டுள்ளது. இதுபோன்று பல விடயங்களை நாம் எதிர்காலத்தில் முன்னெடுப்போம்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் நபர்களையோ அல்லது பேசுகின்றவர்கள் ஐயோ இந்த அரசாங்கம் உண்மையில் கைது செய்யவில்லை. மாறாக தீவிரவாத போக்குடைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்து விசாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதை நாம் உண்மையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்பொழுது அனைத்து தரப்பிலும் இது நடைபெறுகின்றது முஸ்லிம் தரப்பில் நடைபெறுகின்றது சிங்கள தரப்பில் நடைபெறுகின்றது ஏற்கனவே சட்டம் உள்ளது இனவாதத்தை தூண்டுகின்றன அல்லது தீவிரவாதத்தை தூண்டுகின்ற வகையில் எவரும் செய்யக்கூடாது என குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு நன்றாக தெரியும் உங்களுக்கு ஆகவே அந்த சட்ட திட்டங்களுக்குள் நின்று நாம் செயற்பட வேண்டும் என்பதை நான் மக்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் நான் ஆம்பளை சுமப்பதில் அர்த்தமில்லை.

நாடாளுமன்றத்தில் துறைமுக சட்டமூலம் தொடர்பான தீர்மானம் விவாதத்திற்கு வர உள்ளது இது உண்மையிலேயே எப்போது வரப்போகிறது என்பது தொடர்பான விடயம் எமக்குத் தெரியாது இருந்தாலும் இது தொடர்பான விடயங்களை நாம் ஆராய வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாகாண சபை தொடர்பாக முப்பதுக்கு 70 என்ற தீர்மானம் நான் முன்னாள் அமைச்சராக இருக்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்தில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி வாரியாக அனைத்து தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே நிறைவேற்றப்பட்டது . அப்போது அது அமுலுக்கு வரவில்லை ஆனால் அது வருவதால் உண்மையிலேயே என்னை பொருத்தவரையில் சிறுபான்மை இனங்களுக்கு மிகவும் சிறுபான்மையினராக அல்லது சிறு தொகையினராக தொகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு உண்மையிலேயே பாதிப்பு இருக்கின்றது இல்லை என்பதற்கு இல்லை. ஆனால் எங்களை பொருத்தவரை எங்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இதனால் பாதிப்பு வருவது இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார் கருணா அம்மான் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து விட்டு தற்போது தலைமறைவாகி விட்டார் என. அவருக்கு உண்மையிலேயே தெரியாது நாம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டம் என்பது அவருக்கு விளங்காது ஏன் என்றால் அவர் நாடாளுமன்றத்தில் பொதுவாக கதைப்பதற்கு பல விடயங்கள் இருக்கின்றது ஒரு தனிநபரின் விடயத்தை போய் நாடாளுமன்றத்தில் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

ஒரு வேடிக்கையான விடயம் சாணக்கியன் போன்றோர் உண்மையிலேயே ஒரு பாலர் வகுப்பு படிப்போர் போல்தான் செயற்படுகின்றனர் என்றுதான் நான் கூறுவேன் காரணம் அவருக்கு அறிவு இருந்தால் அவ்வாறு பேச மாட்டார்.

அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்றால் நான்கு ஆங்கிலத்தை பேசி 4 சிங்களத்தை பேசினால் தாங்கள் அறிவாளிகள் என நினைக்கின்றார்கள். கருத்துக்களை தெளிவாக முன்வையுங்கள். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிக்க வேண்டுமென்றால் ஒரு ஊடக சந்திப்பை ஏற்படுத்தி எம்மை விமர்சியுங்கள். அதை விடுத்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற நேரம் என்பது மிகவும் பெறுமதியான நேரம் அதில் போய் உங்கள் விமர்சனங்களை செய்யாமல் தமிழ் மக்களின் பிரதிநிதி என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பல பிரச்சினைகள் உள்ளது அதை எடுத்து வைக்க வேண்டும் என்பதை நான் அவருக்கு அன்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அண்மையில் கூட உங்களுக்குத் தெரியும் கருணா அம்மானை தற்போது காணவில்லை என சாணக்கியன் தெரிவித்தார். சாணக்கியன் அவர்கள் 20 நாட்களுக்கு முன்னர் என்னிடம் வந்து எனது காலை பிடித்து கெஞ்சி கேட்டார் வாழைச்சேனை பிரதேச சபைக்கு உதவி செய்து தர வேண்டுமென. தமிழ் தேசியக் கூட்டமைப்பை காப்பாற்ற வேண்டும் எனவும். அன்று என்னுடன் பல செங்கலடி காரியாலயத்தில் இருந்தனர் அங்கு தான் வந்து சந்தித்தார்.

மக்களின் பிரச்சினைகள் என பல விடயங்கள் இருக்கின்றன அவற்றை பாராளுமன்றத்தில் கதையுங்கள். கல்முனை சம்பந்தமான விடயம் தொடர்பாக குரல் கொடுங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயம் நாம் எதிர்க்க வேண்டியதில்லை.

நான் இரு தடவைகள் நாடாளுமன்றத்தில் இருந்து சிறந்த முறையில் அந்த நேரங்களைப் பயன்படுத்தி இருந்தேன். அதேபோன்றுதான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைப் பயன்படுத்த வேண்டும்.

முஸ்லிம் பிரதிநிதித்துவம் பிரதிநிதிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தமது இருப்பை தக்க வைப்பதற்காக தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றார்கள் ஏனைய இணத்தவர்கள் அவர்கள் கதைப்பதில்லை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கதைத்து எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுங்கள்.

Previous Post

சிறுவர் இல்லத்தில் மின்னல் தாக்கம்

Next Post

சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

Next Post

சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures