புத்தளம் – கல்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை வானத்தில் பறந்த ட்ரோன் போன்ற சந்தேகத்திற்குரிய பறக்கும் பொருள் குறித்து கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது ட்ரோன் கெமரா அல்லது சிறிய ரக விமானமாக இருக்கலாமெனவும், கல்பிட்டி பகுதியில் இவ்வாறான சந்தேகத்திற்குரிய விமானம் வானில் வட்டமிட்டதாகவும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார மையமான லக்விஜய அனல் மின் நிலையம் கல்பிட்டி வளைகுடாவில் அமைந்துள்ளது. எனவே கல்பிட்டி களப்பில் கப்பலிலிருந்து இந்த ட்ரோன் விமானம் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.