குளியலறையில் காணப்பட்ட கறைகளை நீக்க, கல்சியம் நீக்கியை ஊற்றிய போது எழுந்த புகையை சுவாசித்த முதியவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி நுணாவில் கிழக்கில் இடம்பெற்றது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையைத் துப்பரவு செய்ய கூலிக்கு ஒருவரை ஏற்பாடு செய்திருந்தனர்.அங்கு சென்ற அவர் கல்சியம் நீக்கியை கறைபடிந்துள்ள பகுதியில் ஊற்றியுள்ளார்.
அதன் போது எழுந்த புகையைச் சுவாசித்த முதியவர் மூச்சுவிடக் சிரமப்பட்டார். அவர் அவசர நோயாளார் காவு வண்டி கிடைக்காத நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.