தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல்மிக்க கலைஞர்களான கலையரசன் – தினேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘தண்டக்காரன்யம் ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவ காடே..’ எனும் இரண்டாவது பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தண்டக்காரன்யம் ‘ எனும் திரைப்படத்தில் கலையரசன், தினேஷ் , வின்சு சாம், ரித்விகா, சபீர் கல்லரக்கல், பால சரவணன், அருள்தாஸ், சரண்யா ரவிச்சந்திரன், யுவன் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சாய் தேவ் ஆனந்த் – சாய் வெங்கடேஸ்வரன் மற்றும் பா . ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 19ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘காவ காடே..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியை உமாதேவி எழுத, பின்னணி பாடகர் அறிவு மற்றும் பின்னணி பாடகி ரீமா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலில் சோக சுவை+ மெல்லிசை + றாப் கலந்திருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.