Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் வேண்­டும்

February 19, 2018
in News, Politics, Uncategorized, World
0

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட்ட கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் வேண்­டும் என்று தமிழ் அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சிங்­களக் கட்­சி­கள் ஒரு­மித்த குர­லில் கோரிக்கை விடுத்­துள்­ளன. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அதி­கூ­டிய சபை­க­ளைக் கைப்­பற்­றிய மகிந்த அணி அதே­போன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் இந்­தத் தேர்­தல் முறை­மை­யில் மாற்­றம் வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா இது தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது,

முன்­னைய தேர்­தல் முறை­மை­யில் ஒரு கட்சி கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றுச் சபை­யைக் கைப்­பற்­றும். தேர்­தல் ஆணை­யா­ளர் அந்­தக் கட்­சியை ஆட்சி அமைக்க அழைப்­பார். இது­தான் கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்ற ஜன­நா­யக வழமை. இது தற்­போது மாற்­றப்­பட்­டுள்­ளது.

பல பிரதே சபை­க­ளில் ஆட்சி அமைக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் – என்­றார்.

ஈ.பி.டி.பி.யின் செய­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­த­தா­வது, இந்த முறை­யில் சாத­க­மும் இருக்­கின்­றது, பாத­க­மும் இருக்­கின்­றது. வட்­டா­ரத்­தில் ஒரு­வர் நிறுத்­தப்­ப­டு­கின்­றார். அவர் அந்த வட்­டா­ரத்­துக்­குப் பொறுப்­புச் சொல்ல வேண்­டி­ய­வ­ரா­கின்­றார்.

இதே­வேளை இம்­முறை வட்­டார முறை­யில் தேர்­தல் இடம்­பெற்­றி­ருந்­தா­லும், குத்­து­வெட்­டுக்­கள் அடி­பி­டி­கள் இடம்­பெற்­றி­ருந்­தன. வட்­டார முறை­யி­லேயே நிலமை இப்­படி என்­றால், விகி­தா­சார முறை­யில் மாத்­தி­ரம் தேர்­தல் நடந்­தி­ருந்­தால் எப்­ப­டி­யி­ருந்­தி­ருக்­கும் ? என்று கேள்வி எழுப்­பி­னார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் தலை­வர் சுரேஷ்­ பி­ரே­ம­சந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது,–கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும். கலப்பு முறை­யில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விகி­தா­சா­ரத்­தின் ஊடாக சபை­கள் தனித்து இயங்க முடி­யாத நிலமை ஏற்­பட்­டுள்­ளது.

அறு­திப் பெரும்­பான்மை எந்­தக் கட்­சி­க­ளுக்­கும் கிடைக்­காத நிலமை காணப்­ப­டு­கின்­றது. சுயேச்­சைக் குழுக்­கள், சிறிய கட்­சி­கள் ஆச­னங்­க­ளைப் பெற்­றுள்­ளார்­கள். எதிர்­கா­லத்­தில், சபை­களை உறு­தி­யாக அமைக்­கக் கூடி­ய­வா­றான வகை­யில் கலப்­பு­மு­றை­யில் உள்ள விகி­தா­சா­ரம் மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்­டும் – என்­றார்.

முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கள­மி­றங்­கிய சுயேச்­சைக் குழு­வின் அமைப்­பா­ள­ரு­மான மு.சந்­தி­ர­கு­மார் தெரி­வித்­த­தா­வது–
முன்­னாள் அமைச்­சர் தினேஸ் குண­வர்­த­ன­வின் காலத்­தில் இருந்த தேர்­தல் முறைமை தொடர்­பான சட்­டத்­தில், ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் திருத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. சிறிய கட்­சி­க­ளுக்­கும், சிறு­பான்­மைக் கட்­சி­க­ளுக்­கும் உரிய இடம் கிடைக்­கும் வகை­யில் மாற்­றம் செய்­யப்­பட்­டது.

இந்த முறைமை தேசி­யக் கட்­சி­க­ளுக்­குப் பாதிப்­பா­ன­து­தான். இந்த முறை­யி­னால் சபை­க­ளில் உறு­தி­யான ஆட்சி அமைக்க முடி­யாத நிலமை ஏற்­பட்­டுள்­ளது. இதனை மாற்­றி­ய­மைக்க வேண்­டும். சபை­க­ளில் உறு­தி­யான ஆட்சி இடம்­பெ­றக் கூடி­ய­வா­றாக, தேர்­தல் முறை­மை­யில் மாற்­றம் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் – என்­றார்.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் அமைப்­பா­ளர் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­த­தா­வது, உள்­ளூ­ராட்சி சபை தேர்­தல் முறை தொடர்­பில் சில சாத­க­மான விட­யங்­க­ளும் பாத­க­மான விட­யங்­க­ளும் காணப்­ப­டு­கின்­றன. சாத­க­மான விட­யங்­க­ளாக, முன்­னைய காலத்­தில் உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் அபி­வி­ருத்­தி­க­ளுக்கு வரை­யறை இல்­லாது இருந்­தது.

ஒரு உறுப்­பி­னர் அந்­தச் சபைக்கு உட்­பட்ட எங்­கும் அபி­வி­ருத்தி செய்­ய­லாம். ஆனால் இப்­பொ­ழுது வட்­டார ரீதி­யாக உள்­ள­தால் வெற்றி பெற்ற வேட்­பா­ளர் தனது வட்­டா­ரத்­தின் அபி­வி­ருத்­தி­களை இலக்கு வைத்து பணி­யாற்ற முடி­யும்.

விருப்பு வாக்கு முறை இல்­லா­த­தால் உட்­கட்சி மோதல்­கள் ஏற்­பட வாய்ப்­புக்­கள் இல்லை.பாத­க­மான விட­யங்­க­ளாக, உள்­ளூ­ராட்சி சபை­யில் பெண்­க­ளின் பிர­தி­நி­தித்­து­வம் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் பல கட்­சி­கள் ஆள் கணக்­குக்கு பெண்­களை கள­மி­றக்­கி­யுள்­ள­னர்.

இத­னால் சபை­யில் ஆற்­றல் குறைந்த உறுப்­பி­னர்­கள் அங்­கம் வகிக்க ஏது­வாக அமை­கின்­றது. எமது பிர­தே­சங்­க­ளில் பெண்­க­ளில் பலர் அர­சி­ய­லுக்கு வர பின்­ன­டிக்­கி­னர்­னர். எதிர்­வ­ரும் காலத்­தில் பெண்­கள் ஆர்­வம் கட்­டி­னால் ஓர­ளவு திருப்­தி­யாக அமை­யும். மேலும் இந்த வட்­டார முறை கார­ண­மாக அநே­க­மான சபை­க­ளில் அறு­திப் பெரும்­பான்­மையை எந்­தக் கட்­சி­யும் நிரூ­பிக்க முடி­யாது தொங்கு நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு இந்­தத் தேர்­தல் முறையே கார­ண­மா­கும் – என்­றார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிரதி பொதுச் செய­ல­ரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வ­சம் தெரி­வித்­த­தா­வது, புதிய தேர்­தல் முறை­மை­யில் பல்­வேறு குறை­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன. இது தொடர்­பில் கட்சி நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தி­லும் ஆராய்ந்­தோம். இதற்­கான திருத்­தங்­க­ளைச் செய்ய வேண்­டும் – என்­றார்.

மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­த­தா­வது, புதிய தேர்­தல் முறை­மை­யில் பல்­வேறு குறை­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன. இதனை நிவர்த்தி செய்ய வேண்­டும் – என்­றார்.

ஜாதிக ஹெல உறு­ம­ய­வின் பேச்­சா­ளர் நிசாந்த சிறி­வர்­ண­சிங்க தெரி­வித்­த­தா­வது–

புதிய தேர்­தல் முறை­மை­யில் பல்­வேறு குறை­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன. இதனை உடன் நிவர்த்தி செய்ய வேண்­டும். இல்­லை­யேல் பழைய தேர்­தல் முறை­மையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். மேலும் அடுத்த மாகாண சபை தேர்­தலை பழைய முறை­மை­யின் கீழ் நடத்த வேண்­டும் என்று மேல் மாகாண சபை­யில் பிரே­ர­ணை­யொன்றை முன்­வைக்­க­வுள்­ளோம் – என்­றார்.

Previous Post

நாடு செயலிழந்துள்ளது- மஹிந்த அங்கலாய்ப்பு

Next Post

அரசாங்கத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள்

Next Post

அரசாங்கத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures