திருகோணமலையில் ஏற்பட்ட நில அதிர்வு, கற்பாறைகள் உள்ள மலைப் பாங்கான பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை களப்பை அண்மித்த பகுதியில் நேற்று (15) அதிகாலை வேளையில், 3.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியது.
எவ்வாறாயினும், இந்த நில அதிர்வின் பின்னர் வேறு நில அதிர்வுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தரிவிமல் சிறிவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

