Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தரக்குறைவாகப் பேசி அடாவடி

November 25, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்த ஏறாவூர் நபர் அங்கு கடமையில் இருந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தரக்குறைவாகப் பேசிய அடாவடித்தனம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்திற்கு நேற்றையதினம் விவசாயிகளுக்கான உரமானியம் பெறுவதற்கான பற்றுச்சீட்டை பெற்று கொள்ள வந்த ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கு கடமையில் இருந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தருடன் வாய்தர்க்கம் புரிந்துள்ளார்.

குறித்த நபர் பற்றுச்சீட்டு பெற வரிசையில் பலர் நின்றபோதும் அதனை தாண்டி சென்று உரமானி பற்றுச்சீட்டை வழங்கி கொண்டிருந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தமக்கு முதலில் வழங்குமாறு கோரியுள்ளார்.

பலர் வரிசையில் நிற்கும் நிலையில் மதிய உணவு நேரம் என்ற காரணத்தால் சிறிது நேரம் அமர்ந்திருக்குமாரும் தான் மதிய உணவு உண்டு விட்டு வருகிறேன் நான் ஒரு கர்ப்பிணி உடல் நிலை இயலாமல் உள்ளது சாப்பிட்டுவிட்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதற்கு அந்த நபர் முதலில் எனது வேலையை முடியுங்கள் நான் யார் என்று தெரியுமா? நான் ஏறாவூர் பிரதேசசெயலக RDO முதலில் எனக்கு வேலையை முடித்துவிட்டுசாப்பிட போங்கள் என தகாத வார்த்தைப் பிரியோகத்தை பிரயோகித்து கர்ப்பிணி உத்தியோகத்தர் மீது அவரின் கையில் இருந்த பற்றுசீட்டுபெறும் ஆவணங்களை முகத்தில் வீசி எறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தர் அழுது புலம்பியுள்ளார்.

இச் சம்பவம் அங்கு வரிசையில் நின்ற பலருக்கு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. உத்தியோகத்தர் இவரின்செயற்பாட்டையடுத்து உடல்நிலை இயலாமல் அழுதுகொண்டிருந்தார்.

மீண்டும் ஏறாவூரைச் சேர்ந்த குறித்த நபர் திரும்ப திரும்ப உடனடியாக தமக்கு பற்றுச்சீட்டு வழங்குமாறு கோரியுள்ளார். எனக்கு உடல்நிலை இயலாமல் உள்ளது எனவே இப்படி செய்த உங்களுக்கு பற்றுச்சீட்டு வழங்க முடியாது வரிசைப்படி வாருங்கள் என மீண்டும் மீண்டும் கூறியும் அந்த நபர் கேட்காது அடாவடி செய்த நிலையில் அவரை அங்கு பற்றுச்சீட்டு பெறவந்தவர்கள் வெளியனுப்பிள்ளனர்.

ஒரு கர்ப்பிணி தாய் என்று பாராது அவரது தாய்மைக்கு இழுக்கை ஏற்படுத்தி அவரது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

சக பெண்ணை கடித்து குதறிய யாழ்ப்பாணத்து பெண்

Next Post

மைத்­தி­ரி­யின் அற்ப ஆசையே நெருக்­கடி நிலைக்கு கார­ணம்

Next Post

மைத்­தி­ரி­யின் அற்ப ஆசையே நெருக்­கடி நிலைக்கு கார­ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures