தங்கள் நாட்டில் தஞ்சம் அடைய வந்த கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 13,000 அகதிகளை சகா பாலைவனத்து விரட்டியடித்ததாக அல்ஜீரியா நாடு மீது புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து வெளியான புகைப்படங்களில் நூற்றுக்கணக்கான அகதிகள் பாலைவனத்தின் கொடும் வெயிலில் பரிதவிப்பது பதிவாகி இருக்கறது. இவர்களில் பலர் உணவு மற்றும் தண்ணீர் இன்றி மரணமடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பலர் சகாரா பாலைவனத்தில் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மீட்பு குழுவினர் சில அகதிகளை மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அல்ஜீரியா கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரம் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டாலர் உதவித் தொகையை பெற்றுள்ளது. அல்ஜீரியா இதுவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 2,888 என அதிகரித்துள்ளது.
ஆனால் இக் குற்றச்சாட்டை அல்ஜீரியா மறுத்துள்ளது.

