Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது..! சீமான்

August 8, 2018
in News, Politics, World
0

‘கருணாநிதியைப் பிரிந்து துயருற்றிருக்கும் கோடிக்கணக்கான தி.மு.க தொண்டர்களின் கண்ணீரிலும், அவரது குடும்பத்தாரின் சோகத்திலும் பங்கேற்கிறேன்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஃபேஸ்புக் பதிவில், ‘தமிழகத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தி.மு.க தலைவர் மு.கருணாநிதி காலமான செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

கடந்த 70 வருட அரசியல் வாழ்வில், 50 ஆண்டு காலம் தி.மு.க-வின் தலைவராக இருந்து, ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகத் திகழ்ந்த கருணாநிதி, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தனது 14 வயது முதல் தனது சளைக்காத உழைப்பால் மேலெழுந்து தமிழகத்தின் உச்சப் பதவியை அடைந்து, அதை ஐந்து முறையாகத் தக்கவைத்தது சாதாரண ஒன்றல்ல.

அவரது அளவற்ற உழைப்பு இளம் தலைமுறையினர் கற்கவேண்டிய ஒன்றாகும். ஒரு இலக்கியவாதியாக, கவிஞனாக, எழுத்தாளனாக, பத்திரிகை ஆசிரியராக, திரைப்பட வசனகர்த்தாவாக, நாடக ஆசிரியராக, மாநிலத்தின் முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, ஒரு அரசியல் கட்சியின் ஐம்பது ஆண்டுகால அடையாளமாக கருணாநிதி பன்முகத் தன்மைகொண்ட ஆளுமையாக விளங்கினார்.

தமிழகத்தின் மாபெரும் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருந்தபொழுதிலும், எழுதுவதற்கு, படிப்பதற்கென நேரம் ஒதுக்கித் தன் இறுதிக்காலம் வரைக்கும் தன் அறிவாற்றலை முனை மழுங்கா கூர் எனத் தீட்டித் திகழ்ந்த கருணாநிதி, எதிர்காலத் தலைமுறையினருக்கு ஒரு படிப்பினை. இந்திய துணைக்கண்டத்தின் முதுபெரும் தலைவராக இருந்து, ஐந்து தலைமுறைகளைக் கண்டு,

தேர்தல் வாழ்வில் தோல்வி ஒன்றே அறியாத மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் கருணாநிதி. இரவு-பகல் அறியாது உழைத்த ஒய்வறியா அந்தப் பெருமகன், இறுதியில் நிரந்தரமாக ஓய்வுகொண்டார் என்ற செய்தி ஈடுசெய்ய இயலா இழப்பாகும். தமிழகத்தின் மாபெரும் அரசியல் ஆளுமையான கருணாநிதியைப் பிரிந்து துயருற்றிருக்கும் கோடிக்கணக்கான தி.மு.க தொண்டர்களின் கண்ணீரிலும், அவரது குடும்பத்தாரின் சோகத்திலும் பங்கேற்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆறுதலை தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

காமராஜர் நினைவிடம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார்!

Next Post

வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்!

Next Post
வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்!

வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures