கல்முனை – பெரியநீலாவணை விஷ்ணு கோவிலுக்கு அருகில் மின்கம்பம் ஒன்று நேற்று மாலை ஏற்பட்ட அதிவேக காற்று காரணமாக குடைசாய்ந்து சிறிய ரக கெப் வாகனம் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக கெப் வண்டி மீது பயணித்த தாய் , தந்தை மற்றும் இரு பிள்ளைகள் பலத்த காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதேவேளை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சிறிது நேரம் ஏற்பட்டதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக கல்முனை மின்சார சபையின் உத்தியோகத்தர் தெரிவித்தார்.