திருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அத்துமீறல் குறித்து திருகோணமலை, மாணிக்கவாசகர் வீதி, இலக்கம் 66இல் வசித்து வரும் கோகில ரமணி திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டு மனு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.