Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

கனடாவில் மார்க்கம் நகர வீதிக்கு ஏ.ஆர் ரஹ்மான் பெயர்

August 31, 2022
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
கனடாவில் மார்க்கம் நகர வீதிக்கு ஏ.ஆர் ரஹ்மான் பெயர்

கனடாவில் மார்க்கம் நகரத்திலுள்ள வீதி ஒன்றுக்கு உலக புகழ் பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

எனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்தமைக்கு மார்க்கம் நகரத்தின் மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் கனடா மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மார்காம் நகரம் மற்றும் கனடா மக்களிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரத்திற்காக நான் பெருமைப்படுகிறேன் மற்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. மார்க்கம் நகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி , ஆலோசகர்கள், இந்திய துணைத் தூதரக ஜெனரல் (அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடா நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏ.ஆர். ரஹ்மான் என்ற பெயர் என்னுடையதல்ல.

இதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது பொதுவான கடவுளின் குணம், நம் அனைவரிடமும் அது உள்ளது மற்றும் எந்த ஒரு நபரும் இரக்கமுள்ளவரின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும்.

ஆகவே, அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக. அனைத்து அன்புக்கும் இந்தியாவின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், நான் உயர உத்வேகத்தை அளித்தனர், அனைத்து பழம்பெரும் மனிதர்கள் உட்பட அத்தனை பேரும், சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் உத்வேகத்தை அளித்தார்கள். நான் கடலில் ஒரு மிகச்சிறிய துளி.

மேலும் பலவற்றைச் செய்வதற்கும், சோர்வடையாமல், ஓய்வு பெறாமல், இன்னும் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

ஒருவேளை நான் சோர்வடைந்தாலும்… நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் உள்ளனர், இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வேன்.

Previous Post

ரிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட சம்பியன்ஷிப் | வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்கள் பங்கேற்பு

Next Post

நடிகர் பிரஜின் நடிக்கும் ‘D3’ டீசர் வெளியீடு

Next Post
நடிகர் பிரஜின் நடிக்கும் ‘D3’ டீசர் வெளியீடு

நடிகர் பிரஜின் நடிக்கும் 'D3' டீசர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures